/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தேகங்களுக்கு கிடைத்தது பதில்
/
சந்தேகங்களுக்கு கிடைத்தது பதில்
ADDED : ஜன 20, 2024 08:28 PM

நாகப்பிரியா, காந்திபுரம்: நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நாங்கள் படிக்கும் போது இருந்த பள்ளி கல்விமுறை முற்றிலும் மாறியுள்ளது. சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., என பல வாரியங்கள் உள்ளன. என் பிள்ளையை பள்ளி மாற்ற திட்டமிட்டுள்ளேன். ஆகையால், இந்நிகழ்ச்சிக்கு சில குழப்பங்களை தெளிவுபடுத்த வந்தேன்.
பள்ளி ஆலோசகர்கள் தெளிவாகவும், பொறுமையாகவும் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்தனர். புதிய கல்விமுறையை நான் எப்படி சொல்லிக்கொடுக்க முடியும் என்ற பயமும் இருந்தது; இந்நிகழ்ச்சிக்கு வந்ததால், குழந்தைகளின் பள்ளி கல்விக்கு சரியான முடிவை மேற்கொள்ள தன்னம்பிக்கை கிடைத்துள்ளது.
மகேந்திரன் விஜய், பவித்ரா, சூலுார்: எங்கள் குழந்தைக்கு, 18 மாதங்கள் ஆகின்றது. எந்த பள்ளியில் சேர்க்கவேண்டும்; கல்வி வாரியங்களின் வேறுபாடுகள் என்ன என்பது குறித்து இப்போதே அறிந்துகொள்ள வேண்டும் என இந்நிகழ்ச்சிக்கு வந்தோம். வெறும் மதிப்பெண்கள் மட்டும் எடுக்க வழிகாட்டும் பள்ளியாக அல்லாமல்; தனித்திறன்களை மேம்படுத்தும் பள்ளியாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். இங்கு, பல பள்ளிகளின் அரங்குகளை பார்வையிட்டோம். ஒவ்வொரு பள்ளி குறித்தும், மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள், கட்டண விபரங்கள், சேர்க்கை செயல்பாடுகளை தெரிந்துகொண்டோம்.
ராஜ்குமார், சாய்பாபகாலனி: என் மகளை ஐந்தாம் வகுப்பில் இருந்து, ஆறாம் வகுப்பில் சேர்க்கவுள்ளேன். பள்ளிகள் சார்ந்த சில தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் வந்தேன். ஒவ்வொரு பள்ளிகளும் பொறுமையாக அனைத்து தகவல்களையும் அளித்தனர். மிகவும் பயனுள்ள இந்நிகழ்ச்சியில், டயர் -1 பள்ளிகள் அதிகளவில் உள்ளன; மண்டலம் வாரியாக டயர்-2 பள்ளிகளும் வரும் ஆண்டுகளில் சேர்த்தால் மேலும் பயனுள்ளதாக அமையும்.
பெனாசிரா பேகம், போத்தனுார்: பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியில், ஒரே இடத்தில் அலைச்சல் இன்றி பல பள்ளிகளின் முழுமையான தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. பள்ளியின் கட்டமைப்பு, விடுதி வசதி, கட்டண விபரங்கள், தனித்திறன் பயிற்சிகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து; சில பள்ளிகளை தேர்வு செய்துள்ளோம். நேரில் ஒரு முறை பார்த்து அட்மிஷன் போடவுள்ளோம்.

