/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரிமைத்தொகை திட்ட பணி; ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
/
உரிமைத்தொகை திட்ட பணி; ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
உரிமைத்தொகை திட்ட பணி; ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
உரிமைத்தொகை திட்ட பணி; ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : ஜன 24, 2024 01:29 AM
கோவை;மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்த, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், கடந்தாண்டு செப்., 15ல் துவக்கி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், 11 லட்சத்து, 43 ஆயிரத்து, 891 கார்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, தகுதியானோருக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறியதால், நான்கு லட்சத்து, 61 ஆயிரத்து, 714 மகளிர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த, கார்டுதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் வினியோகித்தது; அவற்றை பூர்த்தி செய்து பெற்று, பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்தது; கள ஆய்வு செய்து, விண்ணப்பதாரரின் உண்மைத்தன்மையை பதிவு செய்தது உள்ளிட்ட பணிகளை, அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இதுபோன்ற சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தும்போது, கார்டுக்கு, 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்க, தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
அதன்படி, மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக சிறப்பு பணி செய்ததற்கான ஊக்கத்தொகையை, ரேஷன் கடை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.

