/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் உற்சாகம்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் உற்சாகம்
ADDED : ஜன 09, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி அருகே, தேவம்பாடி காளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கடந்த, 1996 முதல் 2000ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பணிபுரிந்த முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு, பள்ளி வளாகத்தில் நடந்தது.
அதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில், முன்னாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

