/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது
/
விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது
ADDED : மார் 25, 2025 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பிப்., மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று, காலை, 11:00 மணிக்கு சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. சப் - கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
எனவே, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம்.
இத்தகவலை சப் - கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.