/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கலுக்கு சண்டை சேவல் தயார்!
/
பொங்கலுக்கு சண்டை சேவல் தயார்!
ADDED : ஜன 13, 2024 11:15 PM

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை உள்ளிட்டவைகளுக்கு எப்போதும் தனி மவுசு உள்ளது. தமிழகத்தில் சேவல்களின் கால்களில் கத்தி கட்டி, சண்டை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல பகுதிகளிலும், மறைமுகமாக கத்தி கட்டி, சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது.
கோவையின் மேற்கு புறநகரான தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில், ஆண்டு முழுவதும், சின்ன சின்னதாக, சேவல் சண்டை சூதாட்டம் நடந்து வருகிறது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பொங்கல் பண்டிகைக்கு, சட்டவிரோதமாக, மறைவான இடங்களில், லட்சக்கணக்கில் பணம் பந்தயம் கட்டி, சேவல் சண்டை நடத்துவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, மூன்று நாட்களும் சேவல் சண்டை நடத்த, சண்டை சேவல்களை தயார்படுத்தியுள்ளனர்.

