ADDED : ஜூன் 19, 2025 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : நகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து, தீ பந்தம் காட்டும் போராட்டம் நடத்த போவதாக பா.ஜ., அறிவித்துள்ளது.
பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்பாறை நகராட்சியில் மக்களுக்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்துதரப்படுவதில்லை. வால்பாறை நகர் கக்கன்காலனி மற்றும் எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் கூட எரிவதில்லை. கக்கன்காலனி தெருவிளக்கை உடனடியாக சரி செய்யாவிட்டால், இன்று(19ம் தேதி) அரசை கண்டித்து, அங்குள்ள மின் கம்பங்களில் தீ பந்தம் காட்டும் போராட்டம் நடத்தப்படும்' என்று கூறியுள்ளார்.