/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடற்தகுதி தேர்வு முன்பதிவு செய்யலாம்
/
உடற்தகுதி தேர்வு முன்பதிவு செய்யலாம்
ADDED : ஜன 24, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவு, கடந்த, 12ம் தேதி வெளியிடப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச உடற்தகுதி தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

