/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்பந்து; ஏ.ஜே.கே., அணி வெற்றி
/
கால்பந்து; ஏ.ஜே.கே., அணி வெற்றி
ADDED : ஜன 24, 2024 01:21 AM

கோவை;மாவட்ட அளவிலான 'சி' டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில், வீரர்கள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி, நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
போட்டியை, பாரதியார் பல்கலை துணை வேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் அஜீத்குமார் லால் மோகன் துவக்கி வைத்தார்.
இதன் 'சி' டிவிஷன் கால்பந்து லீக் முதல் போட்டியில், இந்து முஸ்லீம் கால்பந்து கிளப் மற்றும் ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் கால்பந்து கிளப் அணிகள் மோதின.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய, ஏ.ஜே.கே., அணியின் இளம் வீரர்கள் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 'சி' டிவிஷனில் முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
இரண்டாம் போட்டியில் ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரி எப்.சி., அணி 4 - 0 என்ற கோல் கணக்கில், நெய்விலை எப்.சி., அணியை வீழ்த்தியது.
ஏ.ஜே.கே., கல்லுாரி அணிக்கு பாலு இரண்டு கோல், ஆகாஷ் மற்றும் ஷானு ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து, வெற்றிக்கு உதவினர்.
மூன்றாம் போட்டியில் ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கே.ஆர்.சி., எப்.சி., அணிகளுக்கு இடையேயான போட்டி, 3 - 3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஏ.ஜே.கே., அணிக்கு சல்மான் (32வது நிமிடம்), அஜய் (35வது நிமிடம்) மற்றும் ஆரவ் 55வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
கே.ஆர்.சி., அணிக்கு திலீப் (6வது நிமிடம்), மாஷா டெனில் (25வது நிமிடம்) மற்றும் தினேஷ் (51வது நிமிடம்) கோல் அடித்தனர்.

