/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போர்வெல் மோட்டர் திருடிய நால்வர் கைது
/
போர்வெல் மோட்டர் திருடிய நால்வர் கைது
ADDED : செப் 26, 2025 05:30 AM
தொண்டாமுத்தூர்; தீனம்பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் மணியன், 56. இவர், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், போர்வெல் மோட்டார்களை பழுது பார்க்கும் வேலைகளை, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
இந்நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த போர்வெல் மோட்டார் பழுதானதால் அதனை அகற்றி, உலியம்பாளையம், ஜெயா நகரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வைத்திருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, சில மர்மநபர்கள் பழுதான போர்வெல் மோட்டாரை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, மணியன், தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்டது பி.என்.புதூரை சேர்ந்த ராஜதுரை,22, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருண் ஜோதிவேல், 22, நரசிம்மா, 19 ஆகிய மூவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில், திருடிய போர்வெல் மோட்டார்களை, வடவள்ளியில் உள்ள ரத்ன பாண்டி, 44 என்பவரின் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. திருட்டு பொருட்களை வாங்கியதால், ரத்னபாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.