/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட கழிவு கொட்ட நான்கு இடங்கள் தேர்வு; விதிமீறி கொட்டுவோருக்கு மாநகராட்சி எச்சரிக்கை
/
கட்டட கழிவு கொட்ட நான்கு இடங்கள் தேர்வு; விதிமீறி கொட்டுவோருக்கு மாநகராட்சி எச்சரிக்கை
கட்டட கழிவு கொட்ட நான்கு இடங்கள் தேர்வு; விதிமீறி கொட்டுவோருக்கு மாநகராட்சி எச்சரிக்கை
கட்டட கழிவு கொட்ட நான்கு இடங்கள் தேர்வு; விதிமீறி கொட்டுவோருக்கு மாநகராட்சி எச்சரிக்கை
ADDED : ஜூன் 24, 2025 11:02 PM

கோவை; நகரில் நான்குஇடங்களில், கட்டுமான கழிவுகளை மேலாண்மை செய்ய மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விதிமீறி பொது இடங்களில் கொட்டுவோர் மீது நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் மக்கும், மக்காதது, இ-வேஸ்ட் என தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது.
குப்பை மேலாண்மையில் கட்டுமானம், கட்டட இடிப்பு கழிவுகளை மேலாண்மை செய்வது, பெரும் சவாலாக இருநது வருகிறது. இதற்கென, பிரத்யேக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கட்டட கழிவுகளை ரோட்டோரமும், கண்காணிப்பற்ற பகுதிகள், நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளிலும் சிலர் கொட்டுகின்றனர்.
இதனால், நீர் நிலைகளில் அடைப்பு, போக்குவரத்து இடையூறு போன்ற பாதிப்புகளை, மக்கள் சந்திக்கின்றனர்.
இதனால் புகார்களும், பிரச்னைகளும் அதிகரித்ததால், கிழக்கு மண்டலம், சிங்காநல்லுார் வீட்டு வசதி வாரிய மனைப்பிரிவு வளாகம், மேற்கு மண்டலம் பாலாஜி ஐ.ஓ.பி., காலனி பூங்கா பேஸ்-1 (28 சென்ட்), பேஸ்-2 (29.30 சென்ட்), வடக்கு மண்டலம் வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரிய மனைப்பிரிவு பேஸ்-1 (21.26 சென்ட்), தெற்கு, மத்திய மண்டலத்திற்கு புல்லுக்காடு பகுதியும் (5.5 ஏக்கர்) கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு மேலாண்மைக்குதேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளில், 20 டன் அல்லது அதற்கு மேல் அல்லது மாதத்துக்கு, 300 டன்களுக்கு மேல் உற்பத்தி செய்யும் கழிவு உற்பத்தியாளர்கள், கம்பி, மரம் உள்ளிட்டவற்றை பிரித்து கட்டுமானம் அல்லது இடிப்பு, மறுவடிவமைப்பு பணிகளை துவங்கும் முன் கழிவு மேலாண்மை திட்டத்தை சமர்ப்பித்து, ஒப்புதல் பெற வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம், தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் கட்டட கழிவுகளை உற்பத்தியாளர்கள் சேர்க்க வேண்டும்.
'மற்ற இடங்களில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கட்டணம், அடுத்தகட்ட மேலாண்மை குறித்து, பின்னர் முடிவு செய்யப்படும்' என்றனர்.