/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெடி மருந்து விவகாரத்தில் திருப்பம்: ரூ.2.08 லட்சம் மோசடியில் நான்கு பேர் கைது
/
வெடி மருந்து விவகாரத்தில் திருப்பம்: ரூ.2.08 லட்சம் மோசடியில் நான்கு பேர் கைது
வெடி மருந்து விவகாரத்தில் திருப்பம்: ரூ.2.08 லட்சம் மோசடியில் நான்கு பேர் கைது
வெடி மருந்து விவகாரத்தில் திருப்பம்: ரூ.2.08 லட்சம் மோசடியில் நான்கு பேர் கைது
ADDED : பிப் 02, 2024 12:07 AM
கோவை:குஜராத்தை சேர்ந்தவரிடம் ரூ.2.08 லட்சம் மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்த சிலரிடம் வெடிபொருட்கள் இருப்பதாகவும், அதனை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகவும் கரும்பு கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த முகமது அர்ஷாத், 33, இதயத்துல்லா, 33 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் தொண்டாமுத்துார் அருகே சென்னனுார் பகுதியில் ஒரு குடோனில் மூட்டைகளில் ரசாயன பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சரவணகுமார், கரும்புகடை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த குடோனுக்கு விரைந்து சென்றனர். அங்கு, 50 மூட்டைகளில், 5 டன் ரசாயன பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளில் இருந்து மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் மூட்டையில் இருந்தது பொட்டாசியம் குளோரைடு, உரம் என்பது தெரிந்தது. இதனை அவர்கள் பிளீச்சிங் பவுடர் மற்றும் சில வேதிபொருட்களுடன் சேர்த்து மோசடியாக வெடிபொருட்கள் இருப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரசாயன பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் முகமது அர்ஷாத், இதயத்துல்லா, ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த சங்கமேஷ், 44, என்பவர் ரத்தினபுரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் முகமது அர்ஷாத், இதயத்துல்லா, உக்கடத்தை சேர்ந்த அன்வர்சதாத், 51, வடவள்ளியை சேர்ந்த வில்சன், 33, ஆகியோர் ஆன்லைன் மூலம் என்னிடம் ரூ.2.08 லட்சத்திற்கு பொட்டாசியம் குளோரைடு உரம் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தனர். மேலும், ரத்தினபுரியில் குடோன் உள்ளதாகவும் காண்பித்தனர். அதனை நம்பி நான் பணத்தை கொடுத்தேன். அதன் பின் அவர்கள் பணத்தை பெற்று மோசடி செய்து விட்டனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து ரத்தினபுரி போலீசாரும் அவர்கள் மீது வழக்கு பதிந்து முகமது அர்ஷாத், இதயத்துல்லா, அன்வர்சதாத், வில்சன், ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

