/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேலோ இந்தியா விளையாட்டு: தினமும் ஒரு கலை நிகழ்ச்சி
/
கேலோ இந்தியா விளையாட்டு: தினமும் ஒரு கலை நிகழ்ச்சி
கேலோ இந்தியா விளையாட்டு: தினமும் ஒரு கலை நிகழ்ச்சி
கேலோ இந்தியா விளையாட்டு: தினமும் ஒரு கலை நிகழ்ச்சி
ADDED : ஜன 20, 2024 08:23 PM
கோவை;கோவையில் நடக்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில், தினமும் ஒரு கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, சென்னையில் கோலாகலமாக துவங்கியது. கோவையில் கூடைப்பந்து மற்றும் தாங் டா போட்டிகள், பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நடக்கின்றன. இன்று முதல் 25ம் தேதி வரை ஐந்து நாட்கள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவாக செய்யப்பட்டு இருக்கின்றன.
இன்ற காலை 11:30 மணிக்கு கோவையில் துவக்க விழா நடைபெறுகிறது. கோவை மண்டல கலை பண்பாட்டு மையம் மூலம் தினமும் ஒரு கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நர்த்தனம் நாட்டியப் பள்ளியின் பரத நாட்டியம், நாளை மூலனுார் மின்னல் தப்பாட்ட கிராமிய கலைக்குழு பறையாட்டம், 23ம் தேதி பொள்ளாச்சி விண்மீன் ஜிக்காட்ட கலைக்குழுவின் ஜிக்காட்டம், 24ம் தேதி சின்னவேடம்பட்டி நையாண்டி மேளம் கிராமிய கலைக்குழுவின் அலமேலு மங்கை கலை நிகழ்ச்சி, 25ம் தேதி பொள்ளாச்சி புதுமலர் துடும்பாட்ட கலைக்குழுவின் துடும்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

