/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா கடத்தியவர் சிறையில் அடைப்பு
/
கஞ்சா கடத்தியவர் சிறையில் அடைப்பு
ADDED : செப் 09, 2025 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; காட்டூர் போலீசார், காந்திபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 8 மணிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அருகே சென்றபோது, மூட்டையுடன் நின்றிருந்தவர், போலீசாரை கண்டதும் ஓட துவங்கினார். அவரை பிடித்து விசாரித்ததில், மூட்டையில் கஞ்சா கடத்திச் செல்வது தெரிந்தது.
விசாரணையில், மேற்குவங்கம், முர்ஷிதாபாத்தை சேர்ந்த நஜ்புல் ஹக், 35 எனத் தெரிந்தது.
வடமாநிலத்தில் இருந்து கஞ்சாவை விற்பனைக்கு கடத்தி வந்திருக்கிறார். ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

