/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சகிப்புத்தன்மை இருந்தால் முதியோர் இல்லங்கள் இருக்காது'
/
'சகிப்புத்தன்மை இருந்தால் முதியோர் இல்லங்கள் இருக்காது'
'சகிப்புத்தன்மை இருந்தால் முதியோர் இல்லங்கள் இருக்காது'
'சகிப்புத்தன்மை இருந்தால் முதியோர் இல்லங்கள் இருக்காது'
ADDED : ஜூன் 14, 2025 11:39 PM

கோவை: கோவை, ராம்நகரிலுள்ள ராமர் கோவில் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில், வில்லி பாரதம் எனும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
'திரவுபதி மானம் காத்தல்' எனும் தலைப்பில், காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:
ஒவ்வொருவரும் எந்த இடத்தில், எதனை கூறவேண்டுமோ அதனையே பேசவேண்டும். ஒருவருக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதுபோலவே, துரியோதணனை நோக்கி திரவுபதி யாக மண்டபத்தில் பேசிய பேச்சால், திரவுபதி துகிலுரிக்கப்படும் நிகழ்வு உண்டானது.
தசரதன் தனது மனைவியரிடம் கலந்து பேசியிருந்தால், ராமர் வனவாசம் சென்றிருக்க தேவையில்லை. நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயல் குறித்தும், சிறியவர் முதல் பெரியவர் வரை கருத்து கேட்கலாம். ஒவ்வொருவரும் தங்களது குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவது முக்கியம். அடிக்கடி ஜோசியம் பார்க்க கூடாது. திருமண பொருத்தம், தொழில் குறித்து பார்க்கலாம்.
நமது எண்ணத்தை குழந்தைகளிடம் திணிக்க கூடாது. அவர்களுக்கு எது தேவை என்பதை கேட்டறிந்து செய்து தர வேண்டும்.
பிரம்மசாரிக்கு தொல்லைகள் அதிகம். ஒவ்வொரு ஆணுக்கும் மனைவியால் பாதுகாப்பே. ஆண், பெண் பேதம் கூடாது. சகிப்புத்தன்மை வேண்டும். சகிப்புத்தன்மை இருந்தால் முதியோர் இல்லங்கள் இருக்காது.
தாய் நம்மை சுமந்தவர். தந்தையோ என்றும் சுமப்பவர். சனாதன தர்மம் வளர வேண்டும். அதற்கு குழந்தைகளுக்கு நம் மதம் குறித்து கூறவேண்டும். சூரிய உதயத்திற்கு முன் எழ வேண்டும். அப்போதுதான் வீட்டில் லட்சுமி தங்குவாள்.
இவ்வாறு, அவர் பேசினார்.