/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்னும் 10 நாட்களில் மழைநீர் வடிகால் பணிகள் 'ஓவர்' :தோண்டப்பட்ட திருச்சி ரோடும் விரைவில் சீரமைப்பு
/
இன்னும் 10 நாட்களில் மழைநீர் வடிகால் பணிகள் 'ஓவர்' :தோண்டப்பட்ட திருச்சி ரோடும் விரைவில் சீரமைப்பு
இன்னும் 10 நாட்களில் மழைநீர் வடிகால் பணிகள் 'ஓவர்' :தோண்டப்பட்ட திருச்சி ரோடும் விரைவில் சீரமைப்பு
இன்னும் 10 நாட்களில் மழைநீர் வடிகால் பணிகள் 'ஓவர்' :தோண்டப்பட்ட திருச்சி ரோடும் விரைவில் சீரமைப்பு
ADDED : ஜன 20, 2024 08:41 PM

கோவை;வாலாங்குளம் உபரி நீர் வெளியேறும் மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், இம்மாதத்துக்குள் ரோட்டையும் சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வாலாங்குளமானது, 150 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டுள்ளது. மழைக் காலத்தில் இக்குளம் நிரம்பினால் வெளியேறும் உபரி நீரானது சுங்கம் பகுதியில் வழிந்தோடி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.
சுங்கம் சந்திப்பில் இருந்து ராமநாதபுரம் சிக்னல் வரை உபரி நீர் ரோட்டில் பெருக்கெடுப்பதும், வாகன ஓட்டிகள் திணறுவதும் தொடர் கதையாக இருந்தது. இதையடுத்து, திருச்சி ரோடு வழியாக அல்வேர்னியா பள்ளி அருகே சங்கனுார் வாய்க்காலில் உபரி நீர் சென்றடையும் வகையில், ரூ.9 கோடியில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, கடந்தாண்டு ஜூலை மாதம் துவங்கியது.
அல்வேர்னியா பள்ளி அருகே துவங்கி ஒலம்பஸ் பஸ் ஸ்டாப் வரை பெரும்பாலான பணிகள் முடிந்திருந்த நிலையில், கனமழையால் வாலாங்குளத்தில் இருந்து வெளியேறிய உபரி நீர், ஒலம்பஸ் அருகே ரோட்டில் பெருக்கெடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தியது.
பணிகளை வேகப்படுத்தும் விதமாக, கடந்தாண்டு டிச., 13ம் தேதி முதல் சுங்கம் சந்திப்பில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள், எதிரே ராமநாதபுரம்-சுங்கம் நோக்கி வரும் வழித்தடத்தில் மாற்றிவிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
தேவையான இடங்களில் 'ப்ரீகாஸ்ட்' எனப்படும் ரெடிமேடு கான்கிரீட் கட்டமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. 80 மீட்டருக்கு 'ப்ரீகாஸ்ட்' கொண்டு வரப்பட்டு, 60 மீட்டருக்கும் அதிகமான துாரத்துக்கு முடிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்குள் பணிகளை முழுமையாக முடிக்கும் விதமாக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மழை காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில், 95 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளன. இன்னும், அல்வேர்னியா பள்ளி அருகே சங்கனுார் வாய்க்காலுடன் இணையும் வகையில் சில மீட்டர் துாரத்துக்கு மழைநீர் வடிகால் அமைத்தால் போதுமானது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''திருச்சி ரோட்டில் மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. இன்னும், 10 நாட்களுக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து, மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட ரோட்டை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

