sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோசாலையில், வயதான பசுக்களுக்கு கிடைக்குது ஆதரவு :இறுதி காலம் வரை இலவச உணவு

/

கோசாலையில், வயதான பசுக்களுக்கு கிடைக்குது ஆதரவு :இறுதி காலம் வரை இலவச உணவு

கோசாலையில், வயதான பசுக்களுக்கு கிடைக்குது ஆதரவு :இறுதி காலம் வரை இலவச உணவு

கோசாலையில், வயதான பசுக்களுக்கு கிடைக்குது ஆதரவு :இறுதி காலம் வரை இலவச உணவு


ADDED : ஜன 22, 2024 11:55 PM

Google News

ADDED : ஜன 22, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம் காரமடை அருகே தேக்கம்பட்டி கிராமம் மாதப்பனூரில் ஸ்ரீ பகவத் இராமனுஜர் கோ ரக்ஷண சாலா என்னும் கோசாலை உள்ளது.

இங்கு 80க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, பராமரிக்க முடியாத, வயதான, நோய்வாய்ப்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகள் சேவை மனப்பான்மையுடன் இலவசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பசுக்கள், காளைகளை வளர்க்கும் சில விவசாயிகள், கால்நடைகளின் வயதான காலத்தில் பராமரிக்க முடியாமல், அதற்காக செலவும் செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். கால்நடைகளால் இனி வருவாய் இல்லை என்ற நிலை வரும் போது, சிலர் அடிமாடுக்கு கொடுத்து விடுவார்கள். சிலர் கொடுக்க மனம் இல்லாமல், தங்களது கால்நடைகள் இறுதி வரை சந்தோஷமாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். அவ்வாறு உள்ளவர்கள், இந்த கோசாலையில் தங்களது பசுக்கள், காளைகளை விட்டு செல்கின்றனர்.

அதே போல் நோய்வாய்பட்டு தெருக்களில் படுத்து கிடக்கும் பசுக்களும் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகின்றன.

இதன் நிறுவனர் மேட்டுப்பாளையம் ரோட்டேரியன் மதன்குமார், பராமரிப்பாளர்கள், பாலசுப்பிரமணியம், சடகோப இராமனுஜ தாசன் ஆவர்.

பராமரிப்பாளர்கள் கூறியதாவது : ஸ்ரீ இராமனு ஜரின் 1000 வது ஆண்டை முன்னிட்டு தர்ம காரியத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக இந்த கோ சாலை 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது 20 பசுக்கள், 50 காளைகள், 10 கன்றுக்கள் உள்ளன.

தினம் 80 மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தன்னார்வலர்களின் உதவியுடன் கோசாலை இயங்கி வருகிறது. இங்குள்ள பசுக்கள், காளைகள் இறக்கும் வரை அதற்கு எங்களது அன்பை கொடுப்போம். அதுவே எங்கள் வாழ்நாளின் கடமை.

எழுந்து நிற்க முடியாத மாடுகளுக்கு, அதற்கான இயந்திர உதவியுடன் நிற்க வைத்து தீவனம் கொடுப்போம்.

பின் குளிக்க வைத்து, படுக்க வைப்போம். இங்கு சில பசுக்களிடம் இருந்து கறக்கப்படும் பால் சத்து குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக தருகிறோம்.

பால் விற்பனை செய்வது இல்லை. மாறாக சொசைட்டியில் கொடுத்து மாடுகளுக்கு தீவனங்களை பெற்று கொள்கிறோம்.

கோசாலைக்கு உதவி செய்ய விரும்புவோர் 6383868448 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us