/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில பாலிடெக்னிக் விளையாட்டு பி.எஸ்.ஜி., கல்லுாரியில் துவக்கம்
/
மாநில பாலிடெக்னிக் விளையாட்டு பி.எஸ்.ஜி., கல்லுாரியில் துவக்கம்
மாநில பாலிடெக்னிக் விளையாட்டு பி.எஸ்.ஜி., கல்லுாரியில் துவக்கம்
மாநில பாலிடெக்னிக் விளையாட்டு பி.எஸ்.ஜி., கல்லுாரியில் துவக்கம்
ADDED : ஜன 24, 2024 01:28 AM

கோவை;பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று துவங்கின.
இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதன், கேரம், செஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போட்டிகள், பி.எஸ்.ஜி., கல்லுாரியில் நேற்று துவங்கியது.
இப்போட்டியில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான, மண்டல அளவில் நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய, 11 மண்டலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் துவக்கி வைத்தார்.
நேற்று நடந்த போட்டி முடிவுகள்:
கேரம்: அரையிறுதியில், சென்னை அணி 2 - 0 என்ற செட் கணக்கில் திருச்சியை வீழ்த்தியது.
டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் தஞ்சாவூர் அணி 3 - 1 என்ற செட் கணக்கில் திருச்சி அணியையும்; சேலம் டிவிஷன் அணி 3 - 0 என்ற செட் கணக்கில் வேலுார் அணியையும் வீழ்த்தின.
இறகுப்பந்து: காலிறுதியில், கோவை அணி 2 - 0 என்ற செட் கணக்கில் காஞ்சிபுரம் அணியையும்; ஈரோடு அணி 2 - 0 என்ற செட் கணக்கில் திருநெல்வேலி அணியையும்; சேலம் அணி 2 - 0 என்ற செட் கணக்கில், வேலுார் அணி யையும் வீழ்த்தின.

