/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீர் பண்ணை வளாகத்தில் -எம்.பி., தினேஷ் சர்மா ஆய்வு
/
கழிவுநீர் பண்ணை வளாகத்தில் -எம்.பி., தினேஷ் சர்மா ஆய்வு
கழிவுநீர் பண்ணை வளாகத்தில் -எம்.பி., தினேஷ் சர்மா ஆய்வு
கழிவுநீர் பண்ணை வளாகத்தில் -எம்.பி., தினேஷ் சர்மா ஆய்வு
ADDED : ஜன 20, 2024 08:31 PM

போத்தனுார்;-கோவை செட்டிபாளையம் சாலையில், ஸ்ரீராம் நகர் அருகே மாநகராட்சியின் கழிவுநீர் பண்ணை வளாகத்தில், தினமும் ஆயிரம் டன் குப்பை கழிவு கொட்டப்படுகிறது. சுற்றுப்பகுதியில் வசிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.
பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வசந்தராஜன் தலைமையில், குறிச்சி --- வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டு குழு செயலாளர் மோகன் உள்ளிட்டோர், மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில், மத்திய சுற்றுச்சூழல், சட்டத்துறை அமைச்சர்களிடம் மனு கொடுத்தனர்.
ராஜ்யசபா எம்.பி., தினேஷ் சர்மா, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.,வின் மாவட்ட தலைவர் வசந்தராஜனுடன் குப்பைக் கழிவு கொட்டப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது, ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள், பிரச்னையின் தீவிரம் குறித்து தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்களிடம் இவர் கூறியதாவது:
குப்பைக் கழிவை இவ்வாறு கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசுபட்டு, மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஒரே இடத்தில் இத்தனை கழிவை கொட்டாமல் சிறு, சிறு அளவில் வெவ்வேறு இடங்களில் கொட்ட வேண்டும். இதிலிருந்து பேப்பர் தயாரித்தல். மின்சாரம் உற்பத்தி செய்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தலாம். தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய அரசுக்கு, இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிப்பேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ., தெற்கு மாவட்ட துணை தலைவர் முரளி, மதுக்கரை நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

