/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சியில் சர்வதேச திருவிழா: வானில் வட்டமிட்ட ராட்சத பலூன்கள் பார்வையாளர்கள் உற்சாகம்
/
பொள்ளாச்சியில் சர்வதேச திருவிழா: வானில் வட்டமிட்ட ராட்சத பலூன்கள் பார்வையாளர்கள் உற்சாகம்
பொள்ளாச்சியில் சர்வதேச திருவிழா: வானில் வட்டமிட்ட ராட்சத பலூன்கள் பார்வையாளர்கள் உற்சாகம்
பொள்ளாச்சியில் சர்வதேச திருவிழா: வானில் வட்டமிட்ட ராட்சத பலூன்கள் பார்வையாளர்கள் உற்சாகம்
ADDED : ஜன 14, 2024 02:21 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் சர்வதேச வெப்ப பலுான் திருவிழாவில், வானில் பறந்த வண்ண, வண்ண பலுான்களை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில், ஒன்பதாவது சர்வதேச பலுான் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியாட்நாம் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து, 10 பலுான்கள் வந்துள்ளன.
நேற்று காலை வானில் வெப்ப பலுான் பறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு பலுானாக காற்று நிரப்பி நிற்க வைத்ததை கண்ட, உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணியர், பொதுமக்கள் பரவசமடைந்தனர்.பலுான்கள் முன் நின்று, 'செல்பி' எடுத்துக்கொண்டும், குட்டீஸ்களை நிற்க வைத்து போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.
வானில் ஜாலம்
வானில் ஒவ்வொரு பலுான்களாக பறப்பதை கண்ட மக்கள் பரவசமடைந்தனர். பலுான்களில் நான்கு பேர் பறந்தனர். அவர்களை பார்த்து, மக்கள் கை அசைத்து உற்சாகப்படுத்தினர். ஒரே நேரத்தில் வானில், இரண்டு, மூன்று பலுான்கள் பறப்பதை மொபைல்போனில் படமெடுத்தனர்.
தமிழக சுற்றுலாத்துறை பலுான் ஒன்று பறக்க விடப்பட்டது. மேலும், தவளை, யானை, வாத்து போன்ற ராட்சத பலுான்கள், குட்டீஸ்களை வெகுவாக கவர்ந்தன. டைனோசர் வடிவிலான குட்டி பலுான் மைதானத்தில் நிறுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அந்த பலுான்களை கண்டு குட்டீஸ்கள் சந்தோஷத்தில் மூழ்கினர்.
வரும், 16ம் தேதி வரை காலை, மாலை வேளையில் பலுான் திருவிழா நடக்கிறது. இரவு நேரத்தில் பலுான்கள் நிலை நிறுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
மேலும், மியூசிக் ேஷா, குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. இன்று, மாரத்தான் போட்டி நடக்கிறது என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

