/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற அழைப்பு
/
துாய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற அழைப்பு
துாய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற அழைப்பு
துாய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற அழைப்பு
ADDED : ஜன 24, 2024 01:40 AM
கோவை;அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், துாய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசானது துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை, 2022ம் ஆண்டு டிச., மாதம் அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தில், செப்டிக் டேங்க், பொது, சமுதாய மற்றும் நிறுவன கழிப்பறைகளை சுத்தம் செய்தல், கழிவுநீர் குழாய் பராமரிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் துாய்மை பணியாளர்கள் பயன்பெறலாம்.
குழந்தைகளுக்கு கல்வி உதவி, உடல் நலம் பரிசோதனை, அடையாள அட்டை, காப்பீடு, பணியில் பாதுகாப்பு, பாதுகாப்பு திறன் பயிற்சி, பிற நலத்திட்டங்களுடன் இணைப்பு, நியாயமான ஊதியம் என பல்வேறு நன்மைகளை இதனால் பெறமுடியும்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில், துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் தங்களது பெயர்களை வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

