/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அவசியம்; நிறைவேறுமா நீண்ட கால கோரிக்கை
/
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அவசியம்; நிறைவேறுமா நீண்ட கால கோரிக்கை
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அவசியம்; நிறைவேறுமா நீண்ட கால கோரிக்கை
கொழுமம் ரோட்டில் மேம்பாலம் அவசியம்; நிறைவேறுமா நீண்ட கால கோரிக்கை
ADDED : ஜன 19, 2024 04:10 AM

உடுமலை : உடுமலை - கொழுமம் ரோடு ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க வேண்டும்; தற்காலிக தீர்வாக, தரைமட்ட பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை காந்திநகர் அருகே, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கொமரலிங்கம் செல்லும் ரோடு, 18.80 கி.மீ., தொலைவுடையது. உடுமலையிலிருந்து பழநிக்கு செல்ல மாற்றுப்பாதையாக உள்ள ரோட்டில், 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சுற்றுலா வாகனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளிலிருந்து பழநிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களும் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
பள்ளிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளதால், இந்த ரோட்டில் நெரிசல் அதிகளவு இருக்கும்.
இந்நிலையில், இந்த ரோட்டில், நகர எல்லையில், அகல ரயில்பாதை அமைந்துள்ளது. இந்த ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு, ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
எனவே, ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடப்படும் போது, வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை வரை அணிவகுத்து நிற்கின்றன.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில், ரயில்வே நிர்வாகம் சார்பில், முன்பு தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால், பாலத்தை கடந்து, கொமரலிங்கம் ரோட்டுக்கு வர அணுகு சாலை முறையாக இல்லை. பாலத்தில், இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில், மேம்படுத்தினால், நெரிசல் தவிர்க்கப்படும் வாய்ப்புள்ளது.
மேலும், கொழுமம் ரோட்டில், செல்லும் வாகனங்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தி, மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

