/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று மாதமா சம்பளம் வரலே; ஒன்றிய அலுவலகத்தில் முறையிட முடிவு
/
மூன்று மாதமா சம்பளம் வரலே; ஒன்றிய அலுவலகத்தில் முறையிட முடிவு
மூன்று மாதமா சம்பளம் வரலே; ஒன்றிய அலுவலகத்தில் முறையிட முடிவு
மூன்று மாதமா சம்பளம் வரலே; ஒன்றிய அலுவலகத்தில் முறையிட முடிவு
ADDED : பிப் 01, 2024 10:22 PM
அன்னுார்:சம்பளம் நிலுவை குறித்து, வடக்கலூர் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஒன்றிய அலுவலகத்தில் வரும் 5ம் தேதி முறையிட முடிவு செய்துள்ளனர்.
அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், 100 நாள் வேலை திட்டத்தில், பணிகள் நடந்து வருகிறது. சாலை அமைத்தல், உள்ளிட்ட பணிகள் செய்யும் தொழிலாளர்களுக்கு தினமும் 294 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
அன்னுார் ஒன்றியத்தில் சராசரியாக தினமும் 1,500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடைசியாக கடந்த நவ., 8ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டது. அப்போது ஒரு வார சம்பளம் பாக்கி வைத்தனர். அதன் பிறகு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து வடக்கலூர் ஊராட்சியை சேர்ந்த 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கூறுகையில்,' நவம்பர் மாதத்தில் துவங்கி இதுவரை 13 வாரங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பெரும்பாலும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் 100 நாள் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறோம். இந்த சம்பளத்தை பெற்று தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். தற்போது மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் வீட்டில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ஊராட்சியில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வருகிற 5ம் தேதி அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட உள்ளோம். அதிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் கோவை கலெக்டர் அலுவலகம் செல்ல முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.

