/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாய்பாபா காலனியில் காளியம்மனுக்கு விழா
/
சாய்பாபா காலனியில் காளியம்மனுக்கு விழா
ADDED : மார் 25, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சாய்பாபா காலனி வீதி எண் 9ல் அமைந்துள்ள காளியம்மன் கோவிலின், 64ம் ஆண்டு உற்சவ விழா, இன்று பூச்சாட்டுடன் துவங்குகிறது.
வரும் 27ல் அக்னிகம்பம் நடுதலும், 28 காலை 10:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், ஏப்ரல்1ல் புற்றுக்கண்ணிலிருந்து அம்மனை இரவு அழைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஏப்ரல் 2 காலை 6:00 மணிக்கு, கோஷன் பார்க்கிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு திருக்கோவிலை வந்தடையும், மதியம் 12:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறும்.
ஏப்ரல் 3 பகல் 10:00 மணியளவில், கருப்பராய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், மாலை மஞ்சள் நீராடலும் ஏப்ரல் 4ல் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.