/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கூடைப்பந்து போட்டியில் காரமடை மாணவி வெற்றி
/
தேசிய கூடைப்பந்து போட்டியில் காரமடை மாணவி வெற்றி
ADDED : அக் 14, 2025 09:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; 13 வயதிற்கு உட்பட்ட 50வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி உத்திரகாண்ட் டேராடூனில் நடைபெற்றது.
இதில் காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளி 8ம் வகுப்பு மாணவி தக்ஸதா, தமிழ்நாடு பெண்கள் அணியில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் அந்த அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது.
தமிழ்நாடு அணிக்காக தனது பங்களிப்பை வழங்கி விளையாடிய பள்ளி மாணவியை பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், முதல்வர் சசிகலா, பொருளாளர் ரத்தினசாமி, செயலாளர் ராஜேந்திரன்,நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் மற்றும் பலர் பாராட்டினர்.

