/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் - லாரி விபத்தில் கேரள போலீஸ் பலி
/
பைக் - லாரி விபத்தில் கேரள போலீஸ் பலி
ADDED : ஜன 24, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை;தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது வால்பாறை. மாநில எல்லையில் உள்ள மளுக்கப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்த வில்சன்,41, நேற்று காலை பைக்கில் சென்றார்.
அப்போது, அவரது பைக் மீது, வால்பாறை நோக்கி மரம் ஏற்றி வந்த லாரி மோதியது. விபத்தில் படுகாயமடைந்த அவர், சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து, மளுக்கப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

