/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கமேஸ்வர கோவிலில் 21ல் கும்பாபிேஷகம்
/
சங்கமேஸ்வர கோவிலில் 21ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 19, 2024 04:31 AM

கோவை : கோட்டை ஈஸ்வரன் என்றழைக்கப்படும் கோட்டை சங்கமேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிேஷக பெருவிழா வரும் 21ம் தேதி பக்தர்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெறுகிறது.
இது குறித்து கோட்டை சங்கமேஸ்வர சுவாமி கோவில் செயல் அலுவலர் பிரபாகரன் கூறியதாவது:
திருக்குட நன்னீராட்டு பெருவிழா கடந்த ஜன., 17 அன்று மங்களஇசை, யஜமானார் அனுக்ஞை, வாஸ்துசாந்தி, தீபாராதனையுடன் துவங்கியது. நேற்று மஹாகணபதி, நவக்கிரஹ ஹோமங்களை தொடர்ந்து முதற்கால யாகவேள்வி நடந்தது. நாளை (இன்று) காலை யாகசாலை பூஜைகள் மங்கள இசையுடன் துவங்குகிறது. விக்னேஷ்வரபூஜை, புண்யாஹவாசனம், நான்காம் காலவேள்வி, தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
ஜன.,20 அன்று ஐந்தாம்கால வேள்வியும், 21 அன்று காலை ஆறாம் காலவேள்வி, நாடிசந்தானம், மஹாபூர்ணாஹூதி நடக்கிறது.யாகவேள்வியில் வைக்கப்பட்ட புனித கலசங்கள் கோபுரங்களுக்கு காலை 10:15 மணிக்கு எழுந்தருளு விக்கப்படுகிறது.
சிவாச்சாரியார்கள் அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேதா சங்கமேசுவர சுவாமி, அருள்மிகு சண்முகசுப்ரமணியர் மற்றும் ராஜகோபுர பரிவாரமூர்த்திகளுக்கு புனித தீர்த்தங்கள் ஊற்றி திருக்குடநன்னீராட்டு செய்யப்படுகிறது.
தொடர்ந்து சுவாமிக்கு மஹாஅபிஷேகமும், மஹா அன்னதானமும் நடக்கிறது. திருக்குடநன்னீராட்டு விழாவை சிவாகம சிரோமணி ராஜாபட்டர் தலைமையில் சிவாச்சாரியர்கள் நிகழ்த்துகின்றனர். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமியின் அருளை பெற வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்

