/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்சபா தேர்தல் பணி துவங்குவோம்; முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
/
லோக்சபா தேர்தல் பணி துவங்குவோம்; முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
லோக்சபா தேர்தல் பணி துவங்குவோம்; முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
லோக்சபா தேர்தல் பணி துவங்குவோம்; முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
ADDED : ஜன 23, 2024 01:53 AM

கோவை;கோவையில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க., தான். சமீப காலமாக மாணவர்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கிய திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டார்கள். இதை நாம் தெருமுனை பிரசாரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், வரும் 25ம் தேதி, செல்வபுரத்தில் நடக்க உள்ளது. வரும், லோக்சபா தேர்தலுக்கு, இப்போது இருந்தே பணிகள் மேற்கொள்ள வேண்டும்,என்றார்.
இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலை வகித்தார். முன்னாள் சபாநாயகர் ஜெயராமன், எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், கந்தசாமி, அமுல்கந்தசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.