/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
/
மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜன 23, 2024 12:08 AM
சூலூர்;மனைவியை கொலை செய்த கணவனுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் லாட்டூரை சேர்ந்த கர்மா நாயக் மகன் சுதர்சன் நாயக், 33. இவர் குடும்பத்துடன் சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த, 2021 ஜன., 3ம்தேதி, தனது மனைவியை கொலை செய்தார். அந்த வழக்கில், சூலூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சூலூர் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. சுதர்சன் நாயக்கிற்கு, ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறப்பான முறையில் புலன் விசாரணை செய்த அதிகாரி மற்றும் சாட்சிகளை முறையாக கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸ்காரர் பிரபுவுக்கு, எஸ்.பி., பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார்.

