ADDED : ஜூன் 20, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையத்தில் மாரியம்மன், மாகாளியம்மன் திருக்கோவில் ஆனி பெரும் பூச்சாட்டு திருவிழா துவங்கியது.
கடந்த, 16ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை உடன் விழா தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், கம்பம் வெட்ட செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருவீதி உலா வந்து கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இம்மாதம், 23ம் தேதி வரை தினசரி பூவோடு எடுத்து ஆடி வழிபடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி திருக்கல்யாணம், 26ம் தேதி பொலி எருதுகள் பிடிக்க அம்மன் சன்னிதானத்தில் கயிறு மாற்றுதல், 27ம் தேதி மாரியம்மன் கோவில் முன் எருது கட்டு நடைபெறுகிறது.