/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீரமாச்சி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
/
வீரமாச்சி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 01, 2024 11:55 PM

நெகமம்:நெகமம், வீரமாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 15ம் தேதி, முளைப்பாரிகையிடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 30ம் தேதி, மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், திரவியாஹுதி, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் பிராசதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊரின் தலைவாசலில் இருந்து, மேள வாத்தியம் முழங்க தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. பஞ்ச கவ்ய பூஜை, வாஸ்து பூஜை மற்றும் பிரவேச பலி நடந்தது. அதன்பின், யாக சாலை பிரவேசம், முதல் கால பூஜை நடந்தது.
கடந்த, 31ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து சிலைகளுக்கு பிம்பசக்தி செய்து சயனாதி வாசம் நிகழ்வு நடந்தது. மூன்றாம் கால யாகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு வீரமாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு எந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று, காலை, துவார பூஜை, பஞ்சகவ்ய பூஜை, பூர்ணாஹுதி, யாத்தர தானம், கடம் புறப்பாடு, வீரமாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு, மஹா அபிஷேகம், அலங்காரம், தசதரிசனம், தீபாராதனை நடந்தது. நெகமம் சுற்று பகுதி மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

