/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குனியமுத்துார் பகுதியில் நடமாடும் 'மர்ம விலங்கு'
/
குனியமுத்துார் பகுதியில் நடமாடும் 'மர்ம விலங்கு'
ADDED : ஜன 24, 2024 01:44 AM
போத்தனூர்;குனியமுத்தூர் செங்குளம் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை நடமாடியதாகவும், நாய்களை கடித்து கொன்றதாகவும், தகவல் பரவியது. மக்கள் பீதியடைந்தனர்.
இதையடுத்து, மதுக்கரை வனத்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சுண்டக்காமுத்தூர் ரோடு, ஜெ.ஜெ.நகர், அபிராமி நகர், எம்.எஸ்.அவென்யூ, எம்.எஸ்.பார்க், உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விலங்குகளின் கால் தடம், தடயங்கள் காணப்படவில்லை.
இதையடுத்து, நேற்று முன்தினம் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தொடர்ந்தது. நேற்று கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எவ்வித விலங்குகளின் நடமாட்டமும் பதிவாகவில்லை.
இதையடுத்து, வன விலங்குகளின் நடமாட்டம் இப்பகுதிகளில் இல்லாதது தெரியவந்துள்ளது. இதனால், நாய்களை கொன்ற மர்ம மிருகம் எது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

