/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேஷனல் மாடல் பள்ளி ஆண்டு விழா சிறப்பு
/
நேஷனல் மாடல் பள்ளி ஆண்டு விழா சிறப்பு
ADDED : ஜன 13, 2024 11:29 PM
கோவை;பதுவம்பள்ளி நேஷனல் மாடல் பள்ளி முதலாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. திரைப்பட நடிகர் ரஞ்சித் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
ஆண்டுவிழா நிகழ்வில், மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆடல், பாடல் என அரங்கமே உற்சாகமாக காட்சியளித்தது.
'மொபைல் அடிக்சன்', ' கீரினி குரூவர்ஸ்', அவதார், எஜிப்தியன் என்டர்டைனர்ஸ் உள்ளிட்ட சிறப்பு நடனங்கள் பார்வையாளர்களை அசத்தும் வகையில் இருந்தன.
கல்வி, நடனம், விளையாட்டு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், பள்ளி நிறுவன தாளாளர் சாந்தம்மா, தாளாளர் மோகன்சந்தர், செயலர் உமா, முதல்வர் நிர்மலா, நேஷனல் மாடல் பிற பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

