sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய மேல்நிலை தொட்டி: மக்களின் கோரிக்கைக்கு தீர்வு

/

புதிய மேல்நிலை தொட்டி: மக்களின் கோரிக்கைக்கு தீர்வு

புதிய மேல்நிலை தொட்டி: மக்களின் கோரிக்கைக்கு தீர்வு

புதிய மேல்நிலை தொட்டி: மக்களின் கோரிக்கைக்கு தீர்வு


ADDED : ஜன 22, 2024 11:56 PM

Google News

ADDED : ஜன 22, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட, நிதி ஒதுக்கியதால், பொதுமக்களின் பல ஆண்டுகளாக விடுத்து வந்த கோரிக்கைக்கு, தீர்வு கிடைத்துள்ளது.

காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள, ஆனைப்பள்ளிபுதூரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இக்கிராமத்திற்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு, முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.

அதிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. காலப்போக்கில் மேல்நிலைத் தொட்டியின், மேல் பகுதி உடைந்து தொட்டியின் உள்ளே விழுந்தது.

2014ம் ஆண்டு மேல்நிலைத்தொட்டி பழுது பார்க்கப்பட்டது. அதன் பின்பு மேல்நிலைத் தொட்டியை சுற்றியுள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்தத் தொட்டியிலேயே, ஊராட்சி நிர்வாகம் தண்ணீரை தேக்கி வைத்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில், புதிதாக மேல்நிலைத் தொட்டி, கட்டி கொடுக்க கோரி, பொது மக்கள், பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடமும், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமியிடமும் கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து, எட்டு லட்சத்தை மேல்நிலைத் தொட்டி கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதை அடுத்து ஆனைப்பள்ளிபுதூரில் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.

இது குறித்து ஊராட்சி தலைவர் சிவக்குமார் கூறுகையில்,'மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டு, புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட, நிதி ஒதுக்கப்பட்டது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை தீர்வு கிடைக்கும் வகையில், புதிதாக மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.

விரைவில் தொட்டி கட்டி முடித்து, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us