/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரீம் மொபைல்சில் புதிய சாம்சங் போன்
/
சுப்ரீம் மொபைல்சில் புதிய சாம்சங் போன்
ADDED : ஜன 24, 2024 01:30 AM
கோவை;100 அடி ரோடு, சுப்ரீம் மொபைல்சில், சாம்சங்கின் புதிய மாடலான சாம்சங் கேலக்சி எஸ்24 சீரிஸ் அறிமுக விழா நடந்தது. சுப்ரீம் மொபைல்சின் நிர்வாக இயக்குனர் கவுரிசங்கர் தலைமை வகித்தார்.
திரைப்பட நடிகை சைத்திரா ரெட்டி, புதிய மாடலை அறிமுகம் செய்து வைத்தார். உலகின் முதல் ஏ.ஐ., மொபைல் போனான சாம்சங் கேலக்சி எஸ்24 அல்ட்ரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டுள்ளது.
இதில், இமேஜ் ஆப்டிமைகேஷன், லைவ் வாய்ஸ் டிரான்ஸ்லேசன் மற்றும் சர்க்கிள் டு சர்ச் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
கேலக்சி எஸ்24, ரூ.79,999 முதலும், கேலக்சி எஸ்24 அல்ட்ரா, ரூ.ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 999 முதலும் கிடைக்கிறது. புதிய மொபைல் குறித்த தகவலை, 98587 98587 என்ற எண்ணுக்கு, 'ஹாய்' என வாட்ஸ்அப் செய்து, அறிந்து கொள்ளலாம்.
அனைத்து சுப்ரீம் மொபைல் கிளைகளிலும், அறிமுக விழா ஆபராக, எச்.டி.எப்.சி., கேஷ்பேக் ரூ.5 ஆயிரம் வரையும், அப்கிரேட் போனஸ் ரூ.15 ஆயிரம் வரையும் வழங்கப்படுகிறது. நோ காஸ்ட் இ.எம்.ஐ., உண்டு.
சுப்ரீம் மொபைல்ஸ் மண்டல விற்பனை மேலாளர் அருள்ஜோதி, பிராந்திய விற்பனை மேலாளர்கள் சுரேஷ், சிவராஜ், கோவை கிளை மேலாளர் விவேக், விற்பனை மேலாளர் மகேஸ் ராஜ், சாம்சங் வணிக மேலாளர் கோபிநாத் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

