/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சம்பளம் கொடுக்காத மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் தர்ணா
/
சம்பளம் கொடுக்காத மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் தர்ணா
சம்பளம் கொடுக்காத மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் தர்ணா
சம்பளம் கொடுக்காத மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் தர்ணா
ADDED : ஜன 13, 2024 11:16 PM
கோவை:கோவை மாநகராட்சி, 91வது வார்டை சேர்ந்த, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 11 பேருக்கு சம்பளம் வழங்காததால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டுமென, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் அறிவுறுத்தியிருக்கிறது. ஒப்பந்த நிறுவனத்தினர், அவ்வாறு சம்பளம் வழங்குவதில்லை. மாநகராட்சி நிர்வாகமும் போதிய அக்கறை காட்டுவதில்லை.
தெற்கு மண்டலம், 91வது வார்டை சேர்ந்த, 11 தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருந்ததால், நேற்று பணியை புறக்கணித்து, வார்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி கணக்கில் சம்பளம் செலுத்துவதில் சிக்கல் இருப்பதால், தொழிலாளர்களின் கைகளில் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். ஆனால், நேற்று மாலை வரை, சம்பளம் வழங்கவில்லை என, தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

