sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை ராமர் கோவிலில் வரும் 22ல் தர்மதீபம் ஏற்றும் வைபவம்

/

கோவை ராமர் கோவிலில் வரும் 22ல் தர்மதீபம் ஏற்றும் வைபவம்

கோவை ராமர் கோவிலில் வரும் 22ல் தர்மதீபம் ஏற்றும் வைபவம்

கோவை ராமர் கோவிலில் வரும் 22ல் தர்மதீபம் ஏற்றும் வைபவம்


ADDED : ஜன 19, 2024 04:32 AM

Google News

ADDED : ஜன 19, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் கோவை கோதண்டராமர் தேவஸ்தானத்தில் 2,008 தர்மதீபங்கள் ஏற்றும் வைபவம் நடக்கிறது.

இதுகுறித்து கோதண்டராமர் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் என்.வி.நாக சுப்ரமணியன், செயலாளர் டி.பி.விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது:

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஒவ்வொரு ஹிந்துக்களின் கனவு, 500 ஆண்டுகளுக்குப்பின்பு நிறைவேறியுள்ளது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் கோவை ராம்நகரிலுள்ள கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் மிகப்பெரும் வைபவமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் படி ஜன.,22 அன்று காலை 6:00 மணிக்கு பூபால ராகத்தில் மங்களவாத்தியம் இசைக்கப்படுகிறது. 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவாகாலம் கோஷ்டி. 8:00 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், 9:00 மணிக்கு ராம்நகர் பஜனை கோஷ்டியினரின் ராமநாம சங்கீர்த்தனம்.

10:00 மணிக்கு நாமபஜன் மண்டலியினரின் ராமநாம சங்கீர்த்தனம், 11:00 மணிக்கு ராமர் கோவில் வளாகத்திலுள்ள அபிநவவித்யா தீர்த்த மண்டபத்தில் சீதாராமர் திருக்கல்யாண மஹோற்சவம் நடக்கிறது. பகல் 1:00 மணிக்கு பிரசாத வினியோகமும், மாலை 4:00 மணிக்கு ஸ்ரீ கார்த்தி ஞானேஸ்வர் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும், 4:00 மணிக்கு வேதபண்டிதர்களின் வேதகோஷ முழக்கமும் நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு கோவில் மஹா மண்டபத்தில், ஜோதிட சக்ரவர்த்தி ஏ.எம்.ஆர்., கோவில் அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியன் ஆகியோர் தர்ம தீபம் ஏற்றி வைக்கின்றனர்.

தொடர்ந்து 2,008 விளக்குகள் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பக்தர்கள் ஏற்றி வைக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாலை 6:20 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிவிக்கப்படும் சீதா, லட்சுமண சமேத கோதண்டராமர் உற்சவராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாலை 6:30 மணிக்கு ராமர் சரித்திர நாட்டிய நாடகம் பவித்ரா சீனிவாசன் மற்றும் லாவன்யா சங்கர் குழுவினரால் அரங்கேற்றப்படுகிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us