/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.பி., கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு
/
என்.ஜி.பி., கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு
ADDED : பிப் 02, 2024 12:02 AM

கோவை;டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரியின்செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் 'எட்ஜ்' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆய்வகத்திற்கான சிறப்பு மையத்தின் திறப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை, கடந்த எட்ஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆய்வகத்திற்கான சிறப்பு மையத்தை 'பெங்களூரு டிஜிடோடு டெக்னாலஜிசுடன் இணைந்து துவக்கியுள்ளது.
இது மாணவர்களிடையே எட்ஜ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவன செயலாளர் தவமணி, கல்வி இயக்குனர் மதுரா, தலைமை நிர்வாக அலுவலர்கள் புவனேஸ்வரன், நடேசன், டிஜிடோடு டெக்னாலஜிஸ் தொழில்நுட்ப இயக்குனர், ரோகித் பிரஜபதி ஆகியோர் மையத்தை துவக்கி வைத்தனர்.

