/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளியூர் பஸ்களில் நெரிசல் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
வெளியூர் பஸ்களில் நெரிசல் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
வெளியூர் பஸ்களில் நெரிசல் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
வெளியூர் பஸ்களில் நெரிசல் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜன 18, 2024 10:23 PM

வால்பாறை -வால்பாறையில் தேயிலை மிக முக்கிய தொழிலாக உள்ளது. பெற்றோர்கள் தேயிலை எஸ்டேட்களில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களது பிள்ளைகள் வெளியூரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்களாக பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடபட்டது. விடுமுறைக்கு பின் நேற்று காலை முதல் வெளியூர் செல்ல புதிய பஸ் ஸ்டாண்டில் மக்கள் திரண்டனர்.
இதனால், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழநி, சேலம், திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்த பயணியர், பஸ் ஏற முடியாமல் பல மணி நேரம் காத்திருந்தனர். கூட்ட நெரிசலை குறைக்க வெளியூருக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வால்பாறையில் இருந்து வெளியூர் செல்லும் பயணியர் வசதிக்காக, அதிகாலை, 4:30 முதல் இரவு, 10:00 மணி வரை தொடர்ந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. பயணியர் வசதிக்காக, 20 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் வெளியூருக்கு இயக்கப்படுகிறது,' என்றனர்.

