/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்சிஜன் மருந்து விநியோகம் கருத்தரங்கு
/
ஆக்சிஜன் மருந்து விநியோகம் கருத்தரங்கு
ADDED : ஜன 10, 2024 12:35 AM
கோவை;பேரூர் பகுதியில் உள்ள சேரன் பார்மசி கல்லுாரி அரங்கில், ஆக்ஸிஜன் மருந்து விநியோக முறை பற்றிய கருத்தரங்கு நடந்தது. கல்லுாரியின் டீன் செல்வராணி தலைமை வகித்தார்.
அமெரிக்கா, இல்லிநோய்ஸ் அர்பனா பல்கலையின், பயோ அறிவியல் துறை பேராசிரியர் ஜோசப் இருதயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ''நவீன மருத்துவ உலகின், ஆக்ஸிஜன் மருந்து விநியோக சிகிச்சை முறையால், நுரையீரல் அல்லது கட்டிகள் போன்ற செயல்பாட்டின் தளத்திற்கு, நேரடியாக ஆக்ஸிஜனை வழங்க முடியும். இது, சிகிச்சையின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், பக்க விளைவுகளை தடுக்க இயலும், '' என்றார்.
பார்மசி கல்லுாரி பொறுப்பு முதல்வர் தேவிகா, நர்சிங் கல்லுாரி முதல்வர் மீனா குமாரி, பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் கார்த்திக் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

