sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 துணை ராணுவப்படை அணிவகுப்பு

/

 துணை ராணுவப்படை அணிவகுப்பு

 துணை ராணுவப்படை அணிவகுப்பு

 துணை ராணுவப்படை அணிவகுப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பொதுமக்கள் இடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக, துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

நேற்று நடந்த அணிவகுப்பில் மத்திய துணை ராணுவப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், அதிவிரைவு படையினர், தமிழ்நாடு சிறப்பு போலீசார் என, 150 பேர் பங்கேற்றனர்.

போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) கார்த்திகேயன் தலைமையில் சீரநாயக்கன்பாளையத்தில் இருந்து வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் வரை, 2.4 கி.மீ., துாரத்திற்கு வீரர்கள் ஆயுதங்களுடன் அணிவகுப்பு நடத்தினர்.

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்குவதுடன், தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபட உள்ளனர். மக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட ஏதுவாக, முக்கியப் பகுதிகளில் தினசரி ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

* சுந்தராபுரம் சங்கம் வீதியில் துவங்கிய அணிவகுப்பு சாரதா மில் ரோடு, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் சந்திப்பு வழியாக போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனை சென்றடைந்தது.

மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவனாதன், சி.ஆர்.பி.எப்., துணை கமாண்டன்ட் சோனியா பிரபா, போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், எஸ்.ஐ.கள் மாநகர போலீஸ், ஆயுதப்படை, சி.ஆர்.பி.எப்., பிரிவுகளை சேர்ந்த, 120க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த அணிவகுப்பு வரும் 14ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar