/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இளைய தலைமுறைக்கு பெற்றோர் உந்து சக்தியாக இருக்க வேண்டும்'
/
'இளைய தலைமுறைக்கு பெற்றோர் உந்து சக்தியாக இருக்க வேண்டும்'
'இளைய தலைமுறைக்கு பெற்றோர் உந்து சக்தியாக இருக்க வேண்டும்'
'இளைய தலைமுறைக்கு பெற்றோர் உந்து சக்தியாக இருக்க வேண்டும்'
ADDED : மார் 25, 2025 09:53 PM

சூலுார்; ''பெற்றோரும், உறவினர்களும் குழந்தைகளின் வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும்,'' என, விழிப்புணர்வு சொற்பொழிவில் வலியுறுத்தப்பட்டது.
முத்துக்கவுண்டன் புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் மாதந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
'மாறி வரும் உலகில் நம் இளைஞர்களும், யுவதிகளும்' என்ற தலைப்பில் ஆடிட்டர் நிவாஸ் பேசியதாவது: இன்றைய குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் அறிவார்ந்தவர்கள். அவர்களின் எண்ணங்களை பெற்றோரும், உறவினர்களும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எதை செய்தாலும் எதிர்க்க வேண்டாம். மாற்றி யோசித்து இப்படி செய்தால் இந்த பலன் கிடைக்கும், என, புரிய வைக்க வேண்டும். அவர்களுடன் அன்பாக பழகுங்கள். அவர்களின் மனதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நல்வழி காட்டுங்கள்.
ஏனென்றால், சமுதாயத்தில் பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்த்து வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது. நம் கலாசாரங்களை அழிக்க நினைக்கும் சக்திகள் அதிகரித்துள்ளன.
நெற்றியில் பொட்டு வைப்பது முதல், சாப்பிடும் உணவு வரை மாறிவிட்டது. அதற்கு நாம் அடிமையாகி விடக்கூடாது. குறிப்பாக நம் குடும்ப கட்டமைப்பை சிதைக்கும் முயற்சி பல ஆண்டுகளாக நடக்கிறது. அதற்கு இரையாகி விட கூடாது.
குழந்தைகள், இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சை விதைக்கின்றனர். அவற்றில் இருந்து அவர்களை மீட்டு, அவர்களை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கு உந்து சக்தியாக பெற்றோர், உறவினர்கள் இருக்க வேண்டும். நமக்கு ஒத்துவராத மேற்கத்திய கலாசாரங்களில் சிக்கி கொள்ளக்கூடாது. விழிப்போடு இருந்து சமுதாயத்தை காக்க உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.