/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லூரியில் பாஸ்போர்ட் முகாம்
/
ராமகிருஷ்ணா கல்லூரியில் பாஸ்போர்ட் முகாம்
ADDED : ஜன 19, 2024 04:26 AM

கோவை : ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் பாஸ்போர்ட் முகாம் நேற்று துவங்கியது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம், கோவை மண்டல பாஸ்போர்ட் சேவா கேந்திரா சார்பில் இரண்டு நாட்கள் பாஸ்போர்டஸ் முகாம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடக்கிறது. முகாமை கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் துவக்கி வைத்தார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பேசுகையில்,“இந்தியர்கள் பலர் உலக நாடுகளில் தங்களது தடத்தைப்பதிவு செய்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.மாணவர்கள் இத்தகைய திறமைகளை வளர்த்துக்கொண்டு, உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும். இதற்கு பாஸ்போர்ட் ஒரு முக்கிய போக்குவரத்து ஆவணமாக மாறிவிட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் பெற்று தருவதற்கு வாய்ப்பளித்த கல்லுாரி நிர்வாகத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
முகாமிற்கான தொழில்நுட்ப சேவையை டி.சி.எஸ்., நிறுவனம் செய்திருந்ததது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரகதீஷ்வரன், நாகராஜன், சுபாஷினி, சஹானா பாத்திமா, பிரவீன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்த முகாமில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

