/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் முறையாக வழங்காததால் காலி குடங்களுடன் மக்கள் மறியல்
/
குடிநீர் முறையாக வழங்காததால் காலி குடங்களுடன் மக்கள் மறியல்
குடிநீர் முறையாக வழங்காததால் காலி குடங்களுடன் மக்கள் மறியல்
குடிநீர் முறையாக வழங்காததால் காலி குடங்களுடன் மக்கள் மறியல்
ADDED : ஜன 14, 2024 02:18 AM

பொள்ளாச்சி:ஆனைமலை அருகே, அங்கலக்குறிச்சியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆனைமலை அருகே, அங்கலக்குறிச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. இந்நிலையில், கடந்த, 15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் விரக்தியடைந்த மக்கள், வால்பாறை ரோட்டில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
கிராமத்தின் மற்றொரு பகுதி மக்கள், பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு இடங்களில் நடந்த போராட்டத்தால், வாகன போக்குவரத்து பாதித்தது.
தகவல் அறிந்த ஆழியாறுபோலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினர். குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
அங்கலக்குறிச்சியில், 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அந்த நீரும் கலங்கலாக வருவதால் குடிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், குடிநீருக்காக காலிகுடங்களுடன் அலைமோதுகிறோம். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
ரோடு பணிகளால் குழாய் உடைந்துள்ளது, சரி செய்த பின் குடிநீர் வழங்கப்படும் என ஒரே பதிலையே கூறுகின்றனர். போராட்டம் நடத்தினால் மட்டும், சமரசம் செய்து குடிநீர் வழங்குகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

