/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்பியல்,பொருளியல் எளிது; பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்
/
இயற்பியல்,பொருளியல் எளிது; பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்
இயற்பியல்,பொருளியல் எளிது; பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்
இயற்பியல்,பொருளியல் எளிது; பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்
ADDED : மார் 25, 2025 09:49 PM

அன்னுார்; இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வு எளிதாக இருந்தது என பிளஸ் 2 மாணவர்கள் தெரிவித்தனர்.
அன்னூர் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இயற்பியல் தேர்வு மிக எளிது
ஜன்னத்துல் பிர்தோஸ்
அன்னுார்.
இயற்பியல் பாடத்தில் 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒரு மதிப்பெண் பகுதியில் 15 கேள்விகளும், ஐந்து மதிப்பெண் பகுதியில் ஐந்து கேள்விகளும் மிக எளிதாக இருந்தன. இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகளில் கட்டாய வினா பகுதியில் மட்டும் இரண்டு கேள்விகள் கடினமாக இருந்தன.
தேர்ச்சி பெறுவது உறுதி
பாரி லட்சுமி, அன்னுார்.
இயற்பியல் தேர்வில் பல கேள்விகள் வகுப்பில் ஆசிரியர்கள் தெரிவித்த பகுதியில் இருந்து வந்திருந்தன. மிக எளிதாக தேர்ச்சி பெறலாம். இரண்டு மதிப்பெண் கேள்விகளில் மட்டும் சில கடினமாக இருந்தன.
தரணிஷ், அன்னுார்.
பொருளியல் தேர்வு மிக எளிதாக இருந்தது. 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகளில் மட்டும் இரண்டு கேள்விகள் பாடத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும். எளிதில் தேர்ச்சி பெறலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்த ஆணையூர், கெம்பநாயக்கன் பாளையம், அன்னூர் மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் உற்சாகமாக ஒருவர் மீது ஒருவர் இங்க் தெளித்துக் கொண்டு பழைய நோட்டு புத்தகங்களை கிழித்து மேலே வீசிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.