/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு; பசுமை பரப்பு அதிகரிக்க தீவிரம்
/
வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு; பசுமை பரப்பு அதிகரிக்க தீவிரம்
வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு; பசுமை பரப்பு அதிகரிக்க தீவிரம்
வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு; பசுமை பரப்பு அதிகரிக்க தீவிரம்
ADDED : ஜன 19, 2024 12:07 AM

பொள்ளாச்சி : 'ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில், 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடக்கிறது,' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், 1,109 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டதாக எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு என, எட்டு வனச்சரகங்கள் உள்ளன.
வறண்ட முட்புதர்காடுகள், இலையுதிர்காடுகள், ஈரப்பதமான இலையுதிர்காடுகள், பசுமை மாறாக்காடுகள், வெப்ப மண்டல மழைக் காடுகளான சோலைக்காடுகள், புல்வெளிகள் என பறந்து விரிந்த வனப்பகுதியாக விளங்குகிறது.
மேலும், மூங்கில், தேக்கு, சந்தனம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் நிறைந்துள்ளன. வனத்தில், லண்டானா களைச்செடி பரவியிருந்தன. இவை அகற்றப்பட்டு, அங்கு புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய வனத்துறை திட்டமிட்டது.
இதற்காக, களைச்செடிகள் அகற்றப்பட்டு, புதிய மரக்கன்றுகள் நடவுப்பணி துவங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள, பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப் சரகத்தில், தலா, 90 ெஹக்டேர் வீதம், மொத்தம், 270 ெஹக்டேர் பரப்பளவில், 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.
அதில், வேங்கை, நாவல், மூங்கில், மகாகனி உள்ளிட்டவை நடவு செய்யப்படுகின்றன. நபார்டு திட்டத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன் கூறுகையில், ''கோவை வனக்கோட்டத்தில் மொத்தம், 1,500 ெஹக்டேர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. கோவை வனப்பெருக்கு மையத்தில் பெறப்பட்ட மரக்கன்றுகளை கொண்டு நடவு செய்யப்படுகின்றன.
அதில், ஒரு ெஹக்டேருக்கு, 100 மரக்கன்றுகள் வீதம் நடவு செய்யப்படுகிறது. களைச் செடிகள் மீண்டும் வளராமல் தடுக்கவும், புதிதாக மரங்கள் வளர்த்து பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது,'' என்றார்.

