/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உப்பாறு ஓடையில் பிளாஸ்டிக் கழிவு; சுகாதார சீர்கேடால் அவதி
/
உப்பாறு ஓடையில் பிளாஸ்டிக் கழிவு; சுகாதார சீர்கேடால் அவதி
உப்பாறு ஓடையில் பிளாஸ்டிக் கழிவு; சுகாதார சீர்கேடால் அவதி
உப்பாறு ஓடையில் பிளாஸ்டிக் கழிவு; சுகாதார சீர்கேடால் அவதி
ADDED : அக் 20, 2025 11:55 PM

சுகாதார சீர்கேடு உடுமலை, பெதப்பம்பட்டி உப்பாறு ஓடை பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பழனிசாமி: சேதமடைந்த ரோடு பொள்ளாச்சி, ஆர்.எஸ்.புரம் முதல் தெரு திரும்பும் பகுதியில் ரோடு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், மழை நீர் தேங்கி இருப்பதால், இவ்வழியாக வாகனத்தில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
- மாணிக்கம்: போக்குவரத்து நெரிசல் வால்பாறையில் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணியர் அதிகளவு வருகின்றனர். இதில், பலர் ரோட்டில் ஆங்காங்கே வாகனங்களை 'பார்க்கிங்' செய்கின்றனர். இதனால் மற்ற பயணியருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதை போலீசார் கவனித்து விதிமீறும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கண்ணன்: வடிகால் அமைக்கணும்! பொள்ளாச்சி, சேரன் நகர் அருகே ரோட்டோரம் அதிகளவில் மழை நீர் செல்வதால் வாகன ஓட்டுநர்களுக்கு ரோட்டில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மழை நீர் செல்ல இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
-- பாலு: வேகத்தடை தேவை வடசித்தூர் --- நெகமம் செல்லும் ரோட்டில் கப்பளாங்கரை அருகே 'எஸ் பெண்டு' வளைவு பகுதி உள்ளது. இதில், இரவு நேரத்தில் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகுமோ என்ற அச்சத்துடன் பயணிக்கின்றனர். இதை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- தங்கவேல்: வாகனங்கள் தாறுமாறு! உடுமலை கல்பனா ரோட்டில், இருபுறங்களிலும், தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால், அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
- ஹரிபிரசாத்: சாக்கடை துார்வாரப்படுமா? உடுமலை தளி ரோடு சிக்னல் பகுதியில், மழைக்காலங்களில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள சாக்கடைகளை துார்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சங்கர்: வெள்ளை கோடு தேவை உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில், வெள்ளைக்கோடு போடவில்லை. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறுகின்றனர்.
- ராமகிருஷ்ணன்: ரவுண்டானா அமைக்கணும் உடுமலை, முக்கோணத்தில் ஆனைமலை ரோடு சந்திக்கும் பகுதியில், வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் போது விபத்துகள் ஏற்படுகிறது. அங்கு, ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வினோத்குமார்: ஆக்கிரமிப்பால் அவதி உடுமலை உழவர் சந்தை முன், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- வேலாயுதம்: ஒளிராத தெருவிளக்குகள் உடுமலை, அடிவள்ளி பிரிவில் இருந்து கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை. புதுப்பாளையம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
- ராமச்சந்திரன்: பகலில் ஒளிரும் மின்விளக்கு வடசித்தூரில் இருந்து, நெகமம் செல்லும் வழியில் கோப்பனூர்புதூர் பகுதியில் காலை நேரத்தில் மின் விளக்குகள் எரிகிறது. இதனால், மின்சாரம் வீணாகிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து வீணாகும் மின்சாரத்தை சரி செய்ய வேண்டும்.
- தேவராஜ்:

