/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் மாணவர் கால்பந்து நாராயணகுரு கல்லுாரியில் துவக்கம்
/
பாலிடெக்னிக் மாணவர் கால்பந்து நாராயணகுரு கல்லுாரியில் துவக்கம்
பாலிடெக்னிக் மாணவர் கால்பந்து நாராயணகுரு கல்லுாரியில் துவக்கம்
பாலிடெக்னிக் மாணவர் கால்பந்து நாராயணகுரு கல்லுாரியில் துவக்கம்
ADDED : பிப் 01, 2024 11:12 PM

கோவை;பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கால்பந்து போட்டி க.க சாவடி நாராயணகுரு கல்லுாரியில் நேற்று துவங்கியது.
இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கால்பந்து போட்டி நாராயணகுரு கல்லுாரி சார்பில் இரண்டு நாட்கள் நடக்கிறது.
போட்டியை நாராயணகுரு கல்லுாரியின் பொருளாளர் சஜீஷ் குமார் துவக்கி வைத்தார். இப்போட்டியில் 10க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன. இதில் முதல் இடம் பிடிக்கும் அணி மாநில போட்டிக்கு தகுதி பெறும்.
நேற்று நடந்த முதல் போட்டியில், சங்கரா பாலிடெக்னிக் கல்லுாரி அணி2 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியையும், இரண்டாம் போட்டியில் சி.கே.பி.சி., அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரியையும், இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியையும் வீழ்த்தன.