/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்க் கல்லுாரியில் பொங்கல் விழா
/
பார்க் கல்லுாரியில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2024 09:09 PM
கோவை:கணியூர், பார்க் கல்விக் குழும வளாகத்தில், பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், கும்மி போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
உறியடித்தல், பம்பரம், துப்பாக்கி சுடுதல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பார்க் கல்விக் குழும செயல் அலுவலர் அனுஷா பேசுகையில், ''நாம் அனைவரும் விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், இயற்கையை காக்க வேண்டும்,'' என்றார்.
இறுதியாக, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. 300 ஆசிரியர்கள், மாணவ மாணவியர் திரளாக பங்கேற்றனர்.

