/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் தொகுப்பு 90 சதவீத கார்டுதாரர்களுக்கு கொடுத்தாச்சு!
/
பொங்கல் தொகுப்பு 90 சதவீத கார்டுதாரர்களுக்கு கொடுத்தாச்சு!
பொங்கல் தொகுப்பு 90 சதவீத கார்டுதாரர்களுக்கு கொடுத்தாச்சு!
பொங்கல் தொகுப்பு 90 சதவீத கார்டுதாரர்களுக்கு கொடுத்தாச்சு!
ADDED : ஜன 13, 2024 09:10 PM
கோவை;கோவையில் உள்ள ரேஷன் கடைகளில், 90 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு இருப்பதாக, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.
கோவையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக, பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம், 1,000 ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்கு, கடந்த 10ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 11.5 லட்சம் அரிசி கார்டுகள் உள்ளன. அந்த கார்டுதாரர்கள்அனைவருக்கும், 1,000 ரூபாய் பணம், பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 90 சதவீத கார்டுதாரர்களுக்கு பணமும், பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதிக்குள் அனைத்து கார்டுதாரர்களுக்கும் கொடுத்து முடிக்கப்படும்.
சில ரேஷன் கடைகளில், பணம் மற்றும் பொருட்கள் கொடுக்கவில்லை என, புகார் வந்துள்ளது.
அரிசி கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவருக்கும் இல்லை என்று சொல்லாமல் பணமும், பொங்கல் தொகுப்பும் கொடுக்க வேண்டும் என, கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

