/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடை வீதிகளில் 'பொங்கி வழிந்த' பொங்கல் பொருட்கள் விற்பனை!
/
கடை வீதிகளில் 'பொங்கி வழிந்த' பொங்கல் பொருட்கள் விற்பனை!
கடை வீதிகளில் 'பொங்கி வழிந்த' பொங்கல் பொருட்கள் விற்பனை!
கடை வீதிகளில் 'பொங்கி வழிந்த' பொங்கல் பொருட்கள் விற்பனை!
ADDED : ஜன 13, 2024 11:10 PM

பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை கடை வீதிகளில் நேற்று, பொங்கல் பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது.
இன்று போகி பண்டிகை என்பதால், வீடு சுத்தம் செய்து அலங்கரிக்க தேவையான பூளைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை, வேப்பிலை ஆகியவை நேற்று அதிகம் விற்பனையானது.
பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், பச்சை மஞ்சள், நெய், முந்திரி, கரும்பு, வாழை இலை, தேங்காய், வாழைப்பழம் மற்றும் பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை, மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
கரும்பு விலை இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு ஜோடி கரும்பு, 100 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த ஆண்டு ஒரு ஜோடி கரும்பு 200 ரூபாய்க்கும், 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை மஞ்சள், 40 ரூபாய்க்கும், பூளைப்பூ ஒரு கட்டு 20 ரூபாய்க்கும், ஆவாரம்பூ, வேப்பிலை கட்டு 10 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மண்பானை, 200 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கரும்பு வியாபாரிகள் கூறுகையில், 'ரேஷன் கடைகளில் அரசு இலவசமாக கரும்பு கொடுப்பதால், பெரும்பாலான விவசாயிகள் விளைவித்த கரும்பை, அரசுக்கு விற்பனை செய்து விட்டனர். அதனால் பொது வெளியில் கரும்பு விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது. விலை அதிகரித்துள்ளது' என்றனர்.

